கணினி அறிவியல் தொடர்பான ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு எளிமையான தமிழில் கணினி கற்றுத் தரும் மாதம் இருமுறை இதழாக ‘தமிழ் கம்ப்யூட்டர்’ வெளிவருகிறது. இந்திய அளவில் முதன் முதலாக மாநில மொழி ஒன்றில் தொடங்கப்பட்ட முதல் கணினி இதழ், ‘தமிழ் கம்ப்யூட்டர்’.
முறையாக கணினி அறிவியல் படித்தவர்களுக்கும், கணினி அறிவியலை கல்விக் கூடங்களில் படிக்காதவர்களுக்கும் எளிமையாக கணினி அறிவியல் நுட்பங்களையும், இணையம் தொடர்பான செய்திகளையும் கற்றுத் தரும் இதழ்.
நீங்கள் உங்களுக்கென சந்தா செலுத்துவது போலவே உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் படித்த பள்ளி, கல்லூரிகளுக்கும் பரிசாக ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழுக்கு சந்தா செலுத்தி அனுப்பி வைக்கலாம். நீங்கள் அக்கறை செலுத்தும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் கூட பரிசாக சந்தா செலுத்தலாம். அவர்களின் கணினி தொடர்பான அறிவு வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ‘தமிழ் கம்ப்யூட்டர்’ ஏற்படுத்தும்.
பரிசு அனுப்புபவரின் விவரம், பரிசுக்கு உரியவருக்கு தெரிவிக்கப்படும்.